சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் 4 வார்டு கவுன்சிலர்கள் உட்பட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 பதவிகள் காலியாக உள்ளன. காஞ்சி, செங்கல்பட்டு, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 315 காலியிடங்கள் உள்ளன.
The post உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.