இந்நிலையில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை செய்து தர உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகள் மருத்துவமனையில் உள்ளன. தினசரி 1,300 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். புதிதாக திறக்கப்பட்ட உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மருத்துவமனையில் எந்தக் குறையுமில்லை என நோயாளிகள் கூறினர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை செய்து தர உத்தரவிட்டுள்ளேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.