பெய்ஜிங்: சீனாவின் ஆசிய விவகாரங்களுக்கான மூத்த வௌியுறவு அமைச்சக அதிகாரி லியு ஜின்சாங், சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத்தும் நேற்று சந்தித்து பேசினர். இதுகுறித்து சீன வௌியுறவு அமைச்சகம் வௌியிட்ட செய்திக்குறிப்பில், “பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பான கவலைகளை இருவரும் பரிமாறி கொண்டனர். இந்தியா – பாக். இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தை சர்வதேச சமூகம் வரவேற்கிறது. இதை சீனா ஆதரிக்கிறது, வரவேற்கிறது. இந்த போர் நிறுத்தத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர வேண்டும். மோதலை தவிர்க்க பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை சீனா வரவேற்கிறது appeared first on Dinakaran.