கிடுகிடுவென இறங்கிய தங்கத்தின் விலை சவரன் ரூ.2,360 குறைந்து ரூ.70,000க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை நேற்று கிடுகிடுவென இறங்கியது. சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் ரூ.70,000க்கு விற்பனையானது. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டது. கடந்த வாரம் ஒரேநாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்தது. அதனை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரேநாளில் இருமுறை தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் தங்கத்தின் விலை நேற்று காலை பவுனுக்கு ரூ.1,320 அதிரடியாக குறைந்தது. மேலும் நேற்று மாலையும் சவரன் ரூ.1,040 குறைந்தது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 அதிரடியாக குறைந்து ரூ.8,750க்கும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000க்கும் விற்பனையானது.
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்ததால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் தங்களுக்கு தேவையான நகைகளை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

The post கிடுகிடுவென இறங்கிய தங்கத்தின் விலை சவரன் ரூ.2,360 குறைந்து ரூ.70,000க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: