இந்த புதிய சேவையை எல்.ஐ.சியின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குனருமான சித்தார்த் மொஹந்தி, இயக்குநர்கள் ஜெகநாத், தப்ளேஷ் பாண்டே, சத் பால் மற்றும் துரைசாமி ஆகியோர் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக எல்.ஐ.சி வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் பிரீமியம் செலுத்த மற்றொரு மாற்று விருப்பத்தினை வழங்கியுள்ளது.
அதன்படி, எல்.ஐ.சி போர்டலில் பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 8976862090 என்ற வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளை கண்டறியலாம். அதேபோல், வாட்ஸ் அப் பாட்டில் உள்ள யுபிஐ மூலமாகவும், பேங்கிங் கார்டுகள் மூலமாகவும் நேரடியாக பணத்தை செலுத்திக்கொள்ளலாம். இந்த வாட்ஸ் அப் பாட்டில் பிரீமியம் செலுத்த வேண்டிய பாலிசிகளின் விபரம், பணம் செலுத்தும் முறை மற்றும் ரசீது பெறும் முறை என அனைத்தும் அடங்கி உள்ளன.
இதுகுறித்து எல்.ஐ.சியின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குனருமான சித்தார்த் மொஹந்தி கூறுகையில் ‘‘ வாட்ஸ் அப் பாட்’’ வசதி மூலமாக வாடிக்கையாளர்கள் எளிதாக பணத்தை செலுத்தலாம். குறிப்பாக,இதன் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்து பிரீமியம் தொகையை செலுத்தும் கருவியாக இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளோம். மேலும், எல்.ஐ.சி வாடிக்கையாளர்களுக்கு செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த இவை உதவும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை’’ என்றார்.
The post இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் வாட்ஸ் அப் மூலம் பிரீமியம் செலுத்தும் முறை அறிமுகம் appeared first on Dinakaran.