இதைத்தொடர்ந்து நெரூர் மடம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், இது ஒரு வழிபாட்டு சடங்கு ஆகும் எனவே இந்த சடங்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குமணன், ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில், குக்கே சுப்பிரமணிய சாமி கோவிலில் நடைபெற்று வந்த எச்சில் இலை சடங்கை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. மனிதத் தன்மையற்ற இதுபோன்ற சடங்குகளை அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில்,‘‘ பிறப்பித்த, ஏற்கனவே இதேப்போன்ற ஒரு சம்பிரதாய சடங்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதற்கு உச்ச நீதிமன்றமானது தடை உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
அந்த உத்தரவை நாங்கள் மீற முடியாது. மேலும் இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே ஆணை பிறப்பித்துள்ளது. எனவே அந்த தடையை உச்ச நீதிமன்றம் நீட்டிக்கிறது. இருப்பினும் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’’ என்றனர்.
The post கரூர் மாவட்டம் நெரூரில் எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயத்துக்கு தடை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.