இந்த நிலையில், மாம்பலம் – கோடம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இளம் பெண் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது வேறேதேனும் காரணமாக இருக்கிறதா என மாம்பலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.