தருமபுரி: ஹால்டிக்கெட்டில் உள்ள முகவரி குழப்பத்தால் 3 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் மாவட்டத்தின் பெயர் இல்லாததால் தருமபுரிக்கு பதில் சேலத்துக்கு மாணவர்கள் சென்றுள்ளனர். அரசு கல்லூரி, சேலம் பைபாஸ் சாலை என்று மட்டும் ஹால்டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். சேலத்துக்கு பகல் 1 மணிக்கு வந்த நிலையில் மீண்டும் தருமபுரி செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் 3 மாணவர்கள் தவித்து வருகின்றனர். பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என்பதால் 3 மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
The post ஹால்டிக்கெட்டில் உள்ள முகவரி குழப்பத்தால் 3 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதில் சிக்கல் appeared first on Dinakaran.