திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தபோது கார் கவிழ்ந்து தாத்தா, பேரன் பலி

திருமலை : பெங்களூரை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு காரில் வந்தார். சித்தூர் மாவட்டம் சந்திரகிரி காசிபண்ட்லா அருகே பூதலப்பட்டு-நாயுடுபேட்டை நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்தபோது இவர்கள் சென்ற காரின் குறுக்கே திடீரென ஒரு வாகனம் வந்தது. இதனால் அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க மஞ்சுநாத் காரை நிறுத்த முயன்றார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது,இந்த விபத்தில் மஞ்சுநாத்தின் தந்தை கரிகவுடா(60), அக்கா மகன் நூதன்(6) ஆகியோர் இடிபாட்டில் சிக்கி இறந்தனர். மஞ்சுநாத் மற்றும் அவரது அக்கா சவுமியா(35), தாய் தொட்டம்மா(55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டு அங்கிருந்தவர்கள் வந்து 3 பேரையும் மீட்டு திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பக்தர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல காரில் திருமலையில் இருந்து திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார் மலைப்பாதையில் 20 வது திருப்பத்தில் வந்தபோது கட்டுபாட்டை இழந்து மலைப்பாதையில் தடுப்பு சுவரில் மோதி இடித்து கொண்டு மரத்தில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஏர் பேக் திறந்ததால் அதில் இருந்த நான்கு பக்தர்களும் லேசான காயங்களுடன் தப்பினர்.

காயமடைந்தவர்களை திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாகச் சிதைந்தது. தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு காரை திருப்பதிக்கு கிரேன் மூலம் கொண்டு சென்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தபோது கார் கவிழ்ந்து தாத்தா, பேரன் பலி appeared first on Dinakaran.

Related Stories: