கோத்தகிரி மைதானத்தில் அனைவரும் பாரபட்சமின்றி விளையாடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

*விளையாட்டு வீரர்கள் கோரிக்கை

கோத்தகிரி : கோத்தகிரியில் காந்தி மைதானத்தில் அனைத்து வீரர்களும் பாரபட்சமின்றி விளையாடும் வகையில் அரசு சார்பில் தனிக்குழு அமைத்து அவர்களின் ஒப்புதலுடனும், ஒத்துழைப்புடன் மட்டுமே போட்டி நடத்த வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரியில் காந்தி மைதானம் உள்ளது. இந்த மைதானம் கடந்த 14 ஆண்டுக்கும் முன்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் புனரமைப்பு பணி செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட அளவிலான ஏ, பி, சி டிவிஷன் போட்டிகள் நடந்து வருகிறது.

அவ்வப்போது கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் கிராமப்புற பகுதிகளில் இருந்தும் நகரப்பகுதிகளில் இருந்தும் 60-க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத ஒரு குழுவிடம் இந்த மைதானம் ஒப்படைக்கப்பட்ட காரணத்தினால் வீரர்களிடம் ஏற்றத்தாழ்வு காண்பித்து கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறமையை முடக்கும் வகையில் அவர்களை மைதானத்திற்குள் விளையாட அனுமதிக்காமல் தன்னிச்சையாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு அணிக்கு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும், முதலுதவி பெட்டகம், தண்ணீர் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் செய்து தராமல் பணத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே செயல்படுகின்றனர்.

இதனை முறைப்படுத்தி அனைத்து வீரர்களும் பாரபட்சமின்றி விளையாடும் வகையில் அரசு சார்பில் தனிக்குழு அமைத்து அவர்களின் ஒப்புதலுடனும், ஒத்துழைப்புடன் மட்டுமே போட்டி நடத்த வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி மைதானத்தில் அனைவரும் பாரபட்சமின்றி விளையாடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: