சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

ஏற்கனவே ஜெயலலிதா அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த அரசு அதை கைவிட்டுவிட்டது. தற்போது ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

சுமார் 93 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: