சென்னை: மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பின் படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2025 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லாப் பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாகக் கணக்கிடப்பட வேண்டும். அதுவே. 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.