தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் பகுதியில் இரண்டாம் போக நேரடி நெல் விதைப்பு பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். பெரியகுளம் வராக நதி ஆற்றுப் பாசனம் மூலம் வடுகபட்டி, மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் பருவமழை போதிய அளவு பெய்துள்ளது. இதனால் வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் பாசனவசதி பெறும் கண்மாய்கள் ஆரம்பத்திலேயே நிரம்பியது.
ஜெயமங்கலம் பகுதியில் முதல்போக நெல் நேரடி விதைப்பு 10ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்று அறுவடை பணி முடிந்தது. இந்நிலையில் தற்போது ஜெயமங்கலம் பகுதியில் இரண்டாம் போக நேரடி நெல் விதைப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். வடுகபட்டி, மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் நெல் விதைப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
The post ஜெயமங்கலம் பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.