ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நான்காவது இரவாக எந்தவித தூண்டுதலும் இல்லாமல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “ஏப்ரல் 27-28 இரவு, குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு எதிரே உள்ள பகுதிகளில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் இராணுவ நிலைகள் சிறிய ஆயுதத் தாக்குதலை நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்தத்தை மீறியது இதுவே முதல் முறை. கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்திய மற்றும் பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுவின் பங்கு வெளிப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன. புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் இது மிக மோசமான சம்பவம் அகும்.
பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளை வெளியேற்றுதல், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் அட்டாரி சாவடியை உடனடியாக மூடுதல் உள்ளிட்ட தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானை இந்தியா தாக்கியுள்ளது.
The post எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் 4வது இரவாக பாகிஸ்தான் துப்பாக்கிசூடு: இந்திய ராணுவம் பதில் தாக்குதல் appeared first on Dinakaran.