இந்தியா, பாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல்

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில்,’ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எந்த நேரடித் தொடர்பையும் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடம் இதுவரை வைக்கவில்லை. ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் தெரிவித்தோம்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்க முடியும் என்றும், தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

The post இந்தியா, பாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: