சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருச்செங்கோடு ஈ.ஆர்.ஈஸ்வரன்(கொமதேக) பேசுகையில், ‘‘ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்திற்கும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்திற்கும் கேரள அரசோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்று அமைச்சருக்கு தெரியும். இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் விரைவுபடுத்துவாரா’’ என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘ஏற்கெனவே, பரம்பிக்குளம்-ஆழியாறு போன்ற திட்டங்களுக்கு, ஆணைமலையாறு-நல்லாற்றிலிருந்து நாம் தண்ணீரை திருப்பிக் கொள்ளலாம். 73 டிஎம்சி தண்ணீர் நிரம்பியும்கூட தண்ணீர் வழிந்துபோய்க் கொண்டிருக்கிறது. அதனால், நியாயமாக தண்ணீரை நாம் திருப்பி கொள்ள வேண்டும். பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று எத்தனையோ முறை நாம் அழைப்பு விடுத்திருக்கிறோம். ஆனாலும், கேரள அரசு மெத்தனமாக இருக்கிறது. மீண்டும் ஒரு முறை நேரில் சென்று சந்திக்கலாம் என்றுநினைக்கிறேன்’’ என்றார்.
The post ஆனைமலையாறு-நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனம்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.