கருர், ஏப். 23: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளரிப்பழம் விற்பனை அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் அதிகளவு இளநீர், நொங்கு போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நிகராக வெள்ளரிக்காயும் விற்பனை செய்யப்படுகிறது. நீர்ச்சத்து அதிகம் வெள்ளரிக் காய்களில் உள்ளதால் பொதுமக்களும் ஆர்வத்துடன் இதனை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் பொரணி போன்ற பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் வெள்ளரிப் பழங்களும் வியாபாரிகளால் மொத்தமாக கரூர் பகுதிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளரிப்பழத்திற்கும் மருத்துவ குணம் அதிகம் உள்ளது என்பதால், கருர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் இந்த வகை பழங்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.
The post கரூர் பகுதிகளில் வெள்ளரிப்பழம் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.