மகளின் நிச்சயதார்த்த விழாவில் புஷ்பா பட பாடலுக்கு மனைவியுடன் கெஜ்ரிவால் நடனம்; வீடியோ வைரல்

புதுடெல்லி: மகளின் நிச்சயதார்த்த விழாவில் புஷ்பா பட பாடலுக்கு மனைவியுடன் கெஜ்ரிவால் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது மகள் ஹர்ஷிதாவுக்கு, கல்லூரி நண்பரான சம்பவ் ஜெயின் என்பவருடன் நேற்று திருமணம் நடந்தது.

இந்நிலையில், தனது மகளின் நிச்சயதார்த்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாமி பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் இணைந்து நடனமாடுகிறார். இதே போல், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த நிகழ்ச்சியில் நடனமாடிய மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதை ஏராளமானோர் பார்த்துள்ளனர்.

The post மகளின் நிச்சயதார்த்த விழாவில் புஷ்பா பட பாடலுக்கு மனைவியுடன் கெஜ்ரிவால் நடனம்; வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: