மழைநீரில் கால்வைத்தபோது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த மாணவனை காப்பாற்றிய வாலிபர்: வீடியோ வைரலால் பாராட்டு குவிகிறது

அண்ணாநகர்: மழைநீரில் கால்வைத்தபோது மின்சாரம் பாய்ந்து மயங்கிவிழுந்த மாணவனை உடனடியாக காப்பாற்றிய வாலிபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதனிடையே இந்த வீடியோ காட்சி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை அரும்பாக்கம் உத்தாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் செடன் ராயன் (9). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார்.

கடந்த 16ம்தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அரும்பாக்கம் மங்களநகர் 1 வது தெருவில் வந்தபோது அங்கு தேங்கி நின்ற மழைநீரில் கால் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மாணவன் மயங்கிக் கிடந்தார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கண்ணன் என்பவர் ஓடிவந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

இதனால் மாணவரின் உயிரை காப்பாற்ற முடிந்தது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இதுசம்பந்தமான வீடியோ காட்சி தற்போது சமூகவலை தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

The post மழைநீரில் கால்வைத்தபோது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த மாணவனை காப்பாற்றிய வாலிபர்: வீடியோ வைரலால் பாராட்டு குவிகிறது appeared first on Dinakaran.

Related Stories: