டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் 15 டன்னாக இருந்த தங்கம் இறக்குமதி மார்ச் மாதத்தில் 52 டன்னாக அதிகரித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் தங்கம் விலை உயர்ந்த போதிலும் இறக்குமதி உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.