நாமக்கல்: நாமக்கல்லுக்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் இன்று காலை வருகை புரிந்தார். பின்னர் அவர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து நாமக்கல் – மோகனூர் ரோட்டில் உள்ள இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியைப் பிடிக்கும். தமிழக மாணவர்கள் நீட் தேர்வை நல்ல முறையில் எதிர்கொண்டு வருகின்றனர் என்றார்.
The post தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருக்கிறது: ஒன்றிய அமைச்சர் முருகன் பேட்டி appeared first on Dinakaran.