கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத்தில் இயல்பு நிலை திரும்புகிறது. மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அதன் பின்னர் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனைதொடர்ந்து வெள்ளி கிழமை முதல் சுதி, துலியன், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் பகுதிகளில் பதற்றம் நிலவி வந்தது.
பதற்றம் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திர தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டு இருந்த கடைகள் திறக்கப்பட்டு வருகின்றது.
சாலைகளில் பொதுமக்கள் நடமாடத்தொடங்கி உள்ளனர். இதுவரை வீடுகளை விட்டு வெளியேறிய சுமார் 19 குடும்பங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளன. மேலும் பலர் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்காக மால்டா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்ட நிர்வாகங்கள் பணியாற்றி வருகின்றன. அமைதியின்மையை தடுப்பதற்கு வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தி உள்ளது. இதுவரை 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை இயல்பு நிலைக்கு திரும்புகிறது முர்ஷிதாபாத் appeared first on Dinakaran.