தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டக் கழக அலுவலகங்களிலும் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் பெருமக்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தி; கீழே குறிப்பிடப்பட்டுள்ள “சமத்துவ நாள்” உறுதிமொழியை ஏற்று, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ”சமத்துவ நாளாக” கொண்டாடிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“சமத்துவ நாள்” உறுதி மொழி
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,
சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,
ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,
ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,
வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,
எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய,
நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,
சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க,
நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,
சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும்,
சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன். இவ்வாறு உறுதி அளிக்கப்பட்டது.
The post ஏப்.14ல் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்: திமுக தலைமைக்கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.