பெண்கள், குழந்தைகளுக்கான நலத்திட்ட நிதிகளை வழங்குவதில் தாமதம் ஏன்? தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

புதுடெல்லி: ‘தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களில் (சிஎஸ்எஸ்) சரியான நேரத்தில் தாமதமின்றி நிதி வழங்கப்படுவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு ஏதேனும் செயல்முறை அமைப்புகளை அமைத்துள்ளதா?’ என மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு: தமிழ்நாடு அரசு தனது மாநிலப் பங்கை சரியான நேரத்தில் விடுவித்த போதிலும், ஒன்றிய அரசின் நிதியுதவி அளிக்கும் திட்டங்களான (சிஎஸ்எஸ்) மிஷன் சக்சம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 மற்றும் மிஷன் சக்தி மற்றும் மிஷன் வாத்சல்யா போன்றவற்றிற்கான நிதியை விடுவிப்பதில் ஒன்றிய அரசு தாமதம் செய்கிறதா?

மாநிலங்களுக்கு கடைசி நேரத்தில் நிதி வெளியிடுவதின் காரணமாக, செலவழிக்கப்படாத திட்ட நிதியை அடுத்த நிதியாண்டிற்கு எடுத்துசெல்வதை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு நிதி வழங்கும் அட்டவணையை மறுசீரமைக்க பரிசீலிக்கிறதா?தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் சரியான நேரத்தில் தாமதமின்றி நிதி வழங்கப்படுவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு ஏதேனும் செயல்முறை அமைப்புகளை அமைத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.

The post பெண்கள், குழந்தைகளுக்கான நலத்திட்ட நிதிகளை வழங்குவதில் தாமதம் ஏன்? தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: