விமானத்தில் குழந்தையிடம் 50 கிராம் நகை திருட்டு

புதுடெல்லி: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரியங்கா முகர்ஜி. இவர் தன் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருவுக்கு 6இ 661 என்ற இன்டிகோ விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த விமானத்தில் அதிதி அஷ்வினி சர்மா என்ற பணிப்பெண் பணியில் இருந்தார். இந்நிலையில் அந்த பணிப்பெண் தன் குழந்தை அணிந்திருந்த தங்க சங்கிலியை திருடி விட்டதாக பிரியங்கா முகர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா முகர்ஜி அளித்துள்ள புகார் மனுவில், “நாங்கள் விமானத்தில் சென்றபோது பணியில் இருந்த அதிதி அஷ்வினி சர்மா என் குழந்தையை கழிவறைக்கு அழைத்து சென்றார். திரும்பி வந்தபோது குழந்தை கழுத்தில் இருந்த50 கிராம் தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது ” என தெரிவித்துள்ளார்.

The post விமானத்தில் குழந்தையிடம் 50 கிராம் நகை திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: