வருசநாடு, ஏப். 5: கடமலைக்குண்டு அருகே அய்யனார்கோவில் பிரிவு சாலையில் இருந்து துரைச்சாமிபுரம் அண்ணாநகர், குப்பிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலைகள் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் சுமார் 60 ஆண்டு காலமாக வாகனங்கள், தினந்தோறும் விவசாய நிலங்களுக்கும் கிராமத்திற்கும் சென்று வருகிறது.
இதனால் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்வதற்கும் கிராமத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்கள் கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதே போல் ஆற்றின் குறுக்கே பாலம் வசதி வேண்டி பொதுமக்கள் பலமுறை கிராம சபை கூட்டங்களிலும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே வைகை ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கும், புதிய தார் சாலை ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
The post கடமலைக்குண்டு அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.