கோடை மழையால் பெரியகுளம் ‘ஜில்’ பொதுமக்கள் மகிழ்ச்சி

 

தேனி, ஏப். 5: பெரியகுளம் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பகலில் மழை பெய்ததையடுத்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்தில் சில நாட்களாக கடும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அதிகாலை மகளே பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதியிற்கு வந்தனர். இரவு நேரங்களில் வெயிலின் காரணமாக கடும் புழுக்கம் ஏற்பட்டு தூக்கம் வராமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. கோடை வெயிலில் தாக்கத்தை குறைக்கும் வகையில் மாவட்டத்தில் பரவலாக பழ ரசக்கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று பெரியகுளம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான வடுகபட்டி, தாமரைக்குளம், கைலாசபட்டி, கல்லுப்பட்டி, லட்சுமிபுரம், எ.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும் ஒரு சில இடங்களில் மிதமான கனமழையும் பெய்தது. இந்த மழையானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் பெரியகுளம் பகுதி குளிர்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post கோடை மழையால் பெரியகுளம் ‘ஜில்’ பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: