ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.5: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் ராமநாதபுரம் தேசிய பசுமைப்படை சார்பாக ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியத்தில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை பயன்படுத்த வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பைகளை கைவிடுவோம், துணிப்பைகளை கையில் எடுப்போம் மண்வளம், மற்றும் மனித நலம் காப்வோம் என்பது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் தலைமை தாங்கினார்.
ஒன்றிய தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். இதில் உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும், துணிப்பைகள் வழங்கி பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், துணிப்பை பைகளை பயன்படுத்துவோம் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பசுமைப்படையினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஆர்.எஸ்.மங்கலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.