வங்கதேசம், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள கிராமங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.6839 கோடி மதிப்பிலான துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் 2ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிரா, ஒடிசா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள நான்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சம்பல்பூர் – ஜராப்டா 3-வது மற்றும் 4 வது பாதை, ஜார்சுகுடா- சசோன் 3வது மற்றும் 4வது பாதைகள், கர்சியா-நயா ராய்ப்பூர்-பர்மல்காசா 5வது மற்றும் 6வது பாதை, கோண்டியா-பல்ஹர்ஷா இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே சார்பில் ரூ.18,658 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதோடு,போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இந்தத் திட்டங்களினால் 3350 கிராமங்களும் 47.25 லட்சம் மக்களும் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்ட துடிப்பான கிராமங்கள் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.