திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி செப்டம்பர் மாதம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும்: எடப்பாடி கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி வருகிற செப்டம்பர் மாதம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வேளாண் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இன்னும் வழங்கப்படவில்லை. அதேபோல, ஒரு மெட்ரிக் டன் கரும்பிற்கு ஆதார விலையாக 4,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டாவது வழங்கப்படுமா? வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: இப்போது நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,050 தான். வருகிற காலத்தில் அது 2,500 ஆக வழங்குவதற்கு முன்பே அறிவிப்பு கொடுத்துவிட்டார்கள். இன்னும் அதுமட்டும்தான் குறையிருக்கிறது.

செப்டம்பர் மாதம், வருகிற சீசனில் அது மறுபடியும் ரூ.2,500 நெல்லுக்கு கொடுத்துவிடுவார்கள். கரும்பை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட ரூ.3,500 ஆக இருக்கிறது. இப்போது, தர்மபுரியில் பார்த்தால் கிட்டத்தட்ட அதே விலையேற்றம் வரும்போது டன் ரூ.4,000 வந்துவிட்டது. இருந்தாலும் வருகின்ற அடுத்த மாதங்களில் கண்டிப்பாக கரும்பு மெட்ரிக் டன்னுக்கு ரூ.4,000 வழங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்றார்.

The post திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி செப்டம்பர் மாதம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும்: எடப்பாடி கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: