துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்வில், செர்பியா நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் ஜிம்னாசியாட் 2025 போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 6 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விமான பயண கட்டணம், தங்குவதற்கான செலவுகள், போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணம், விசா கட்டணம், காப்பீட்டு கட்டணம், உணவுக்கான செலவுகள் என ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து வழங்கினார்.
மேலும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதி உதவி தேவைப்படும் விளையாட்டு வீரர்கள் www.t*champio*s.sdat.i* என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
The post ஜிம்னாசியாட் 2025 போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் 6 பேருக்கு ரூ.15 லட்சம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.