வெளிநாடுவாழ் இந்தியர், வெளிநாட்டவர் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: பதிவாளர் தகவல்

 

சென்னை, ஏப். 2: வெளிநாடு வாழ் இந்தியர், வளைகுடா நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், வெளிநாட்டவர், மிகக்குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகளை சேர்ந்தவர்கள், சிறு தீவுகளாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளை சேர்ந்தவர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம், என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளான கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரிகள் மற்றும் திருச்சி உறுப்பு கல்லூரியில் 2025-26ம் ஆண்டு பி.இ., பி.டெக்., பி.பிளான் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு cfa.annauniv.edu/cfa என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்கள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்கள் இணையதளம் வாயிலாக வருகிற ஜூன் மாதம் 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், அண்ணா பல்கலைக்கழக காஞ்சிபுரம் உறுப்பு கல்லூரியில் பி.இ. (மின்பொறியியல்) பட்டப்படிப்புக்கு மேற்கண்ட இணையதளத்தில் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

The post வெளிநாடுவாழ் இந்தியர், வெளிநாட்டவர் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: