லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும், லண்டனுக்கு செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது .
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இங்கிருந்து தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால், விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
லண்டனில் இருந்து சென்னைக்கு நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டியது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம். இந்த விமானத்தில் லண்டன் பயணிகள் மட்டுமின்றி ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பயணிகளும் அதிக அளவில் சென்னை வருவார்கள்.
இதனால், பயணிகளிடம் இந்த விமானத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால், லண்டனிலிருந்து இன்று அதிகாலை சென்னை வந்திருக்க வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
The post சென்னையில் இருந்து லண்டன், தூத்துக்குடி செல்லும் 4 விமானங்கள் திடீரென ரத்து: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.