முதல்வருக்கு 40 கோடி இஸ்லாமியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்: இந்திய ஹஜ் அசோசியன் தலைவர் அபுபக்கர்

சென்னை: “வக்பு வாரிய திருத்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை நாட்டுக்கு எடுத்துக்காட்டான விஷயம்” என சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜூம்மா மஸ்ஜித்தில் ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை முடித்துவிட்டு இந்திய ஹஜ் அசோசியன் தலைவர் அபுபக்கர் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அவர் அளித்த பேட்டியில்; “2025 ஹஜ் பயணம் செய்யக் கூடிய அனைவருக்கும் 5900 ஹாஜிமார்களுக்கு 25,000 என்ற வகையில் 14 கோடியே 75 லட்ச ரூபாயை எந்த முதல்வரும் அறிவிக்காததை தமிழக முதல்வர் அறிவித்ததற்கு 40 கோடி இஸ்லாமியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று ஒரு தினம் இரவுக்குள் அனைத்து இந்து மற்றும் பிற மத சகோதரர்கள் இல்லத்திற்கு சென்று அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள், உணவருந்திவிட்டு வாருங்கள் அதுதான் ஒரு பாதுகாப்பான சமுதாயமாக நம் சந்ததிகளுக்கு ஏற்பாடு செய்யும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சுமார் 18 ஆண்டுகள் கோரிக்கையான நங்க நல்லூரில் தமிழக அரசுக்கு என முதல்முறையாக சொந்தமாக ஹஜ் இல்லம் கட்ட இருப்பது முத்தாய்ப்பான செய்தி.

வக்பு வாரிய திருத்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை நாட்டுக்கு எடுத்துக்காட்டான விஷயம். மத்திய அரசு இது தொடர்பாக பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். தொழுகையில் கருப்புப் பட்டை அணிந்து இஸ்லாமியர்கள் வந்தது அவர்களது வருத்தத்தை பதிவு செய்யும் விதத்தில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

The post முதல்வருக்கு 40 கோடி இஸ்லாமியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்: இந்திய ஹஜ் அசோசியன் தலைவர் அபுபக்கர் appeared first on Dinakaran.

Related Stories: