பரனூர் சுங்கச்சாவடி அருகே ஆம்னி பேருந்துகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு: தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் ஆம்னி பேருந்துகள் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி அருகே சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து நெரிசல் எற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார், வேன், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கனரக லாரிகள் என சென்னை – திருச்சி மார்கமாகவும் அதேபோல், திருச்சி – சென்னை மார்கமாகவும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் அந்த அளவுக்கு மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலையில், ஆம்னி பேருந்து ஓட்டுநர் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி பயணிகளை இறக்கியும், ஏற்றுவதும் தொடர் கதையாகி வருகிறது.

சில நேரங்களில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை இறக்க திடீரென சாலையில் நிறுத்தி ஏற்றுவதால் மற்றும் இறக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் சாலை ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கி போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து ஏற்படாதவாறும் காவல்துறையினரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் ஆம்னி பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிய பேருந்துக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பரனூர் சுங்கச்சாவடி அருகே ஆம்னி பேருந்துகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: