எங்களுக்கு கூட்டணி தேவையில்லை; நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்: சீமான் உறுதி

திருச்சி: நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என சீமான் திட்டவட்டமாக கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அரசியலில் மாற்றம் ஏற்படுத்த எங்கள் கட்சி முனைப்போடு உள்ளது. நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல. குற்றவாளி பிடிபட்டால் பல்வேறு உண்மைகள் வெளிவருமோ என அஞ்சி, சுட்டு பிடிக்கும் சம்பவங்கள் நடந்தேறுகிறது. கருத்துக்கணிப்பில் 36 லட்சம் வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட எங்கள் கட்சியின் பெயர் சேர்க்கப்படவில்லை. இது நேர்மையான கருத்துக்கணிப்பு இல்லை. கருத்து திணிப்பு. 2026 தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டு திமுகவை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். எதிரியை தீர்மானித்து விட்டு களத்தில் இறங்கி உள்ளோம். எங்களுக்கு கூட்டணி தேவையில்லை. இன்னும் சில மாதங்களில் நாம் தமிழர் கட்சி எவ்வாறு போட்டியிடப் போகிறது என தெரியும். நாங்கள் பெறப்போவது, அதிமுக, பாஜ, திமுகவின் வாக்குகள் இல்லை. மக்களின் வாக்குகள். ஒவ்வொரு முறையும் ஒரு தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது என் கோட்பாடு. அமெரிக்கா போன்று எண் முறையில் தேர்தலை நடத்த வேண்டும், இதிலும் எண்கள் படிக்கத் தெரியாத மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் வரும் பிரதமர் மோடி என்னை காண வரவில்லை, நானும் அவரை காண செல்ல போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post எங்களுக்கு கூட்டணி தேவையில்லை; நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்: சீமான் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: