உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

ஏழாயிரம்பண்ணை, மார்ச் 30: விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை சுப்பிரமணியாபுரம், விஜயகரிசல்குளம், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து வந்துள்ளன.
இந்நிலையில் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள தனியார் பட்டாசு அலுவலகத்திற்கு எதிரே, பட்டாசு தயாரித்து வருவதாக ஏழாயிரம் பண்ணை காவல் சார்பு ஆய்வாளர் ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசின் உரிய அனுமதி இல்லாமல் திரி பொருத்தப்பட்டுள்ள வெடிகள் தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. சுமார் 2000 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன்(30), ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (31) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

The post உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: