பரமக்குடி,மார்ச் 30: பரமக்குடியில் கைத்தறி நெசவு தொழிலாளர்களின் ஆண்டு பேரவை கூட்டம், நேற்று மாவட்ட தலைவர் ராதா தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ராஜன், சிபிஐ மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இந்த கூட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். கச்சா பொருள்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். நெசவாளருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
அரசு ரிபேட் மானியத்தை உயர்த்த வேண்டும். கைத்தறிக்கு முற்றிலும் ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் மாவட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளர் பேரவையின், புதிய மாவட்ட தலைவராக சுப்பிரமணியன், துணைத் தலைவர்களாக பெருமாள், ருக்குமாங்கதன், செயலாளராக சிவக்குமார், துணைச் செயலாளர்களாக லட்சுமி நாராயணன், நாகநாதன், பொருளாளராக நாகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் எஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் நன்றி கூறினார்.
The post நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வேண்டும்: பேரவை கூட்டத்தில் கோரிக்கை appeared first on Dinakaran.