பள்ளி மாணவி பலாத்காரம் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

தர்மபுரி: பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள பெருசாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (29), லாரி டிரைவர். இவர் கடந்த 2023 ஜனவரி 9ம் தேதி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, பெருசாகவுண்டம்பட்டியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், 2023 ஏப்ரல் 6ம் தேதி, அரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். தர்மபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி சிவஞானம், நேற்று தீர்ப்பளித்தார். லாரி டிரைவர் சுரேசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

The post பள்ளி மாணவி பலாத்காரம் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: