பொதுமக்கள் எதிர்பார்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் கிழக்கு கடற்கரை சாலையொட்டி இடைக்கழிநாடு பேரூராட்சி உள்ளது. இங்கு, 21 வார்டுகள் கொண்டுள்ள இந்த பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பள்ளிகள் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பகுதி மக்களின் பிரதான தொழில்களாக மீன் பிடித்தல், மீன், பழ வகைகள் என பல்வேறு வகையான வியாபாரங்கள் செய்து வருகின்றனர். இதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பலத்தரப்பட்ட பல்வேறு வேலை, வியாபாரம் நிமித்தமாக தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சென்னை – பண்டிச்சேரியில் செல்லும் சாலையில் உள்ள இந்த இடைக்கழிநாடு பேரூராட்சி பெரும் பரபரப்பளவு கொண்ட பேரூராட்சி. பேரூராட்சியின் வளர்ச்சி காரமாக கிழக்கு கடற்கரை சாலையில் தொடர் விபத்துகளும் தொடர்கதையாகி வருகிறது.
அதோபோல், எதிர்ப்பாராமல் ஏற்படும் கொலை, கொள்ளை, சண்டை போன்ற குற்றச்சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் அளிக்க சூனாம்பேடு அல்லது செய்யூர் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த இரண்டு காவல் நிலையங்களும் சுமார் 10 முதல் 15 கிலோ மீட்டர் வரை தொலைவு கொண்டுள்ளதால் புகார் அளிக்க செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், அலைபேசி மூலம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பவ இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் காவல் துறையினரும் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கழிநாடு பேரூராட்சியின் மைய பகுதியான கடப்பாக்கம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பேரூராட்சி பொதுமக்கள் பல ஆண்டு காலமாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.எனவே, இப்பேரூராட்சி மக்கள் நலனை கருத்தில் கொண்டு இடைக்கழிநாடு பேரூராட்சிக்கென புதிய காவல் நிலையம் அமைத்துதர மாவட்ட நிர்வாகம், தொகுதி எம்எல்ஏ பாபு ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்து அதிகரிப்பு
இடைக்கழிநாடு பேரூராட்சி சென்னை – பண்டிச்சேரி இசிஆர் சாலையில் உள்ளதால் தற்போது பேரூராட்சியின் வளர்ச்சி என்பது அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது. பேரூராட்சியில் குடியிருப்புகளும், சாலையையொட்டி கடைகளும் நாளுக்குநாள் பெருகி கொண்டோ வருகின்றன. இதனால், போக்குவரத்தும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. விபத்து என்பது ஒரு தெடார்கதையாகி வருகிறது. எனவே விபத்தையும், குற்றச்சம்பவங்களை தடுக்க காவல் நிலையம் அவசியம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சினிமா படப்பிடிப்பு தலம்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் ஆலம்பறைகோட்டை, முதலியார் குப்பம் படகு குழாம் என இரண்டு சுற்றுலா தலங்கள் உள்ளது. இங்கு, சுற்று வட்டார பகுதி மக்கள் இன்றி, சென்னை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும், பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் கூடும் பறவைகளை காண கைவெளி பகுதியும் தற்போது ஒரு சுற்றுலா பகுதியாக மாறி வருவதால் அங்கும் பொதுமக்கள் கூட்டம் கூடுகின்றனர். மேலும், மாமால்லபுரம், பாண்டிச்சேரி வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
எம்எல்ஏ கோரிக்கை வைப்பாரா?
செய்யூர் தொகுயின் எம்எல்ஏ பல்வேறு தேவைகளுக்காக சட்ட பேரவையில் கோரிக்ககைள் வதை்து வருகிறார். அதற்கு, தீர்வுகளும் கிடைத்து வருகிறது. அதுபோன்று, இடைக்கழிநாடு பேரூராட்சியில் காவல் நிலையம் அமைய இத்தொகுதியின் எம்எல்ஏ பனையூர் பாபு சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்க வேண்டும் என்பது பேரூராட்சி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.
The post சுற்றுலா தலமாக மாறிவரும் இடைக்கழிநாடு பேரூராட்சியில் காவல் நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.