இதைத் தொடர்ந்து, கடந்த தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், 2030 ம் ஆண்டிற்குள் ‘குடிசைகள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டி தரப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் மீது உரையாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
அதன்படி, இந்த திட்டத்தினை விரைந்து செயல்படுத்தும் பொருட்டு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3.50 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு அரசாணை!! appeared first on Dinakaran.