பத்ராசலம் கோதண்டராமர் கோயில் அருகில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி

திருமலை: பத்ராசலம் கோதண்டராமர் கோயில் அருகில், 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். தெலங்கானா மாநிலம், பத்ராசலம் கோதண்டராமர் கோயில் அருகில் சீனிவாசராவ் என்பவர் ஒரு அறக்கட்டளை பெயரில் பணம் வசூல் செய்து ஏற்கனவே கட்டுமானத்தில் இருந்த 2 மாடி கட்டிடத்துக்கு மேல் கூடுதலாக 4 மாடி கட்டிடத்தை கட்டி வருகிறார். இதற்காக அனைத்து மாடிக்கும் கான்கிரீட் தளம் போடப்பட்டு பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென கட்டிடத்தின் அனைத்து தளங்களும் இடிந்து விழுந்தன. எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று அனைவரையும் மீட்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தரம் இல்லாத கட்டுமானத்தால் அனைத்து தளங்களும் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

The post பத்ராசலம் கோதண்டராமர் கோயில் அருகில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: