சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு.. உத்திரப்பிரதேச மாநில கொள்ளையர்கள் 2 பேர் விமானத்தில் கைது!!

சென்னை: சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறித்த உத்திராப்பிரதேச மாநில கொள்ளையர்கள் விமானத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் சைதாப்பேட்டை, கிண்டி, சாஸ்திரி நகர், திருவான்மியூர், வேளச்சேரியில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளார்கள். காலையில் நடைபயிற்சி சென்ற 5 மூதாட்டிகள், கடைக்கு பொருள் வாங்கச் சென்ற ஒரு மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.

திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். அதே பகுதியில் உள்ள சாஸ்திரி நகரிலும் செயின் பறிப்பு நடந்துள்ளது. கிண்டி மைதானத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் 5 சவரன் நகை, சைதாப்பேட்டையில் மூதாட்டியிடம் 1 சவரன், வேளச்சேரி, பள்ளிக்கரணையிலும் தலா ஒரு மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை விமான நிலையம், சென்னை – ஆந்திர எல்லை பகுதிகள், மின்சார ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும், சைதாப்பேட்டையில் கொள்ளையர்கள் செயின் பறிக்கும் போது பதிவான சிசிடிவி கட்சியை சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், அதேபோல விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் விமானம் மூலம் தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை நிறுத்தி கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் மும்பை தப்பி செல்ல முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

The post சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு.. உத்திரப்பிரதேச மாநில கொள்ளையர்கள் 2 பேர் விமானத்தில் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: