×

மண்டல அளவிலான கராத்தே போட்டி 500 மாணவர்கள் பங்கேற்பு

ஓமலூர், மார்ச் 25: ஓமலூரில் மேற்கு மண்டல அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 8 முதல் 17வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கு ஏன்சியண்ட் சோடோகான் கராத்தே டோவின் பொது செயலாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் சிவபெருமாள் தலைமை வகித்தார். துணை செயலாளர் கனகசிவன், பயிற்சியாளர்கள் சக்திவேல், கார்த்தி, ராஜதுரை, பிரேமா ஆகியோர் போட்டிகளை நடத்தினர். இதில், எம்எல்ஏ மணி, பத்மாவனி மகளிர் கல்லூரி நிர்வாக அலுவலர் முத்துகுமார், சவுத் இந்தியன் பள்ளி தாளாளர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

The post மண்டல அளவிலான கராத்தே போட்டி 500 மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Omalur ,Western Regional Karate Competition ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மது விற்ற பெண் உட்பட 3 பேர் கைது