×

கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 25: கிருஷ்ணகிரி டவுன் எஸ்ஐ செல்வமாணிக்கம் மற்றும் போலீசார், ராசுவீதி பாணக்கார தெருவில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த காதர் (33) என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி டவுன் எஸ்ஐ அன்பழகன் மற்றும் போலீசார், பெத்தம்பட்டி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிக் கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாறையூரை சேர்ந்த சென்றாயன் (36), சவுளூர் ராமமூர்த்தி (33), தொன்னையன்கொட்டாய் விஜயகுமார் (34), பெத்தனப்பள்ளி விஜயகுமார் (33) என்பது தெரிந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : KRISHNAGIRI ,KRISHNAGIRI TOWN ,SI SELVAMANIKAM ,RASWAITI BANAKARA STREET ,Kadar ,
× RELATED 83 ஆண்டு கால கோரிக்கை கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டம் நிறைவேறுவது எப்போது?