×

அரசு பள்ளியில் ஆண்டு விழா

தேன்கனிக்கோட்டை, மார்ச் 25: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரகரதொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மம்மா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். ஊர்கவுண்டர் மாதேசப்பா, ஜனார்த்தனரெட்டி, மாதேஷ், வெங்கடேஷ், வீரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் குமார், காயத்திரி, கீதா, சுபாஷினி, விக்டோரியாமேரி, கிராம மக்கள் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் மோகன் நன்றி கூறினார்.

The post அரசு பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Thenkani Kottai ,Marakarathoti Panchayat Union Middle School ,Thali Union ,Krishnagiri district ,Mamma ,Headmaster ,Gopalakrishnan ,Urgaunder Mathesappa ,Janardhana Reddy ,
× RELATED தக்காளி தோட்டத்தை நாசம் செய்த யானை