தர்மபுரி, மார்ச் 25: தர்மபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடியில், தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெண் பட்டுக்கூடுகளை ஏலத்திற்காக கொண்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு, 43 விவசாயிகள் 2 டன் 513 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். வெண்பட்டுக்கூடு அதிகபட்சமாக ₹649க்கும், சரசாரியாக ₹533க்கும், குறைந்தபட்சமாக ₹344க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹13 லட்சத்து 56 ஆயிரத்து 64க்கு ஏல பரிவர்த்தனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.