தர்மபுரி, மார்ச் 25: தர்மபுரி மாவட்டம், இண்டூர் எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பண்டஅள்ளி ஏரி ஓடை அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேல், கார்த்திக், சங்கர்(45), தமிழரசன்(35), மாசிலாமணி(61), சின்னசாமி(51) ஆகியோரை, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து ₹2400 பணத்தை கைப்பற்றினர். இதேபோல், பண்டஅள்ளி அம்பேத்கர் வீதி பகுதியில், சூதாடிக் கொண்டிருந்த ரசாக்(65), அஜித்குமார்(25), செல்லதுரை(35), நாகராஜ்(35), பாலாஜி(25), கார்த்திக், ராமன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post சூதாடிய 12 பேர் கைது appeared first on Dinakaran.