×

வடசேரி பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு போக்குவரத்து கழகத்திற்கு அபராதம்

நாகர்கோவில், மார்ச் 25: வடசேரி பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அலுவலகங்கள், நேர கண்காணிப்பாளர் அலுவலகம், ஊழியர்கள் ஓய்வறைகள் உள்ளன. இந்த அலுவலக பகுதிகளையும், அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் மகேஷ் பல முறை அறிவுறுத்தியிருந்தார். கடந்த மாதம் வடசேரி பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்ட போது, போக்குவரத்து கழக அறை பகுதியில் இருந்து வெளியே குப்பைகள் கொட்டப்பட்டு, சுகாதாரமற்ற நிலை இருந்தது. அப்போது மேயர் மகேஷ் போக்குவரத்து கழக அதிகாரிகளை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், நாகர்கோவில் பஸ் நிலையங்களில் ஆய்வு செய்த மேயர் மகேஷ், அசுத்தம் செய்ததற்காக ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

The post வடசேரி பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு போக்குவரத்து கழகத்திற்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Vadassery ,Nagercoil ,Anna ,Dinakaran ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்