மார்ச் 25: அஞ்சுகிராமத்தில் விற்பனைக்கு வந்த ராட்சத மட்டி குலைகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அஞ்சுகிராமத்தில் திமுக பிரமுகரான பழக்கடை ஜெகன் என்பவர் நடத்திவரும் பழக்கடைக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த பழக்கடைக்கு சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்ட இரண்டு ஆளுயர மட்டி வாழைக் குலைகள் விற்பனைக்கு வந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
The post அஞ்சுகிராமத்தில் பழக்கடையில் ஆளுயர மட்டி வாழைக்குலைகள் அஞ்சுகிராமம், appeared first on Dinakaran.